PF News: வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற விரும்புகிறீர்களா? வழிமுறைகள் இதோ…
Unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
‘நிர்வகி’என்ற விருப்பத்தை சொடுக்கி, ஆதார் எண், PAN மற்றும் வங்கி விவரங்கள் போன்ற KYC விவரங்களை சரிபார்க்கவும். அவை சரிபார்க்கப்பட்டதா இல்லையா என்பதை அறிய KYC ஐத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது ‘ஆன்லைன் சேவைகள்’ விருப்பத்தை சொடுக்கவும். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘உரிமைகோரல் (படிவம் -31, 19 & 10 சி)’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது KYC விவரங்கள், உறுப்பினர் விவரங்கள் மற்றும் பிற சேவை விவரங்கள் திரையில் தோன்றும். உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை பூர்த்தி செய்து, பின்னர் ‘சரிபார்க்கவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த கட்டத்தில், சான்றிதழில் கையொப்பமிட ‘ஆம்’ விருப்பத்தை சொடுக்கி, பின்னர் ‘ஆன்லைன் உரிமைகோரலுக்கு தொடரவும்’ விருப்பத்தை சொடுக்கவும்.
‘நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்’ என்ற பிரிவிற்கு சென்று, உரிமைகோரல் படிவத்தில் உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதாவது, ‘முழு ஈ.பி.எஃப் தீர்வு’, ‘ஈ.பி.எஃப் தொகையை பகுதியாக திரும்பப் பெறுதல் (கடன் / முன்கூட்டியே)’ அல்லது ‘ஓய்வூதியம் திரும்பப் பெறுதல்’என்பதில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் நிதியைத் திரும்பப் பெற ‘பி.எஃப் அட்வான்ஸ் (படிவம் 31)’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். தேவையான அளவு, நோக்கம் மற்றும் பணியாளரின் முகவரி போன்ற விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
சான்றிதழைக் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவும் நீங்கள் தொகையை திரும்பப் பெறுவது அங்கீகரிக்கப்பட்ட பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும்.