PPF விதிகளில் மாற்றம்! உங்களுக்கு பாதிப்பா? இல்லை ஆதாயமா?

Tue, 18 Oct 2022-2:28 pm,

பணத்தை டெபாசிட் செய்யாமல் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பிபிஎஃப் கணக்கைத் தொடரலாம். இதில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை. முதிர்ச்சியடைந்த பிறகு, நீங்கள் PPF கணக்கை நீட்டிக்க விரும்பினால், நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.

பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு எதிராக நீங்கள் கடன் வாங்க விரும்பினால், விண்ணப்பிக்கும் தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் கணக்கில் இருக்கும் பிபிஎஃப் தொகையில் 25 சதவீதத்தில் மட்டுமே கடன் வாங்க முடியும். உதாரணமாக, நீங்கள் அக்டோபர் 31, 2022 அன்று விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அக்டோபர் 31, 2020 அன்று, உங்கள் PPF கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால், நீங்கள் 25 சதவிகிதக் கடனைப் பெறலாம்.

பிபிஎப்பில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு எதிராக கடன் பெறுவதற்கான வட்டி விகிதம் 2 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடனின் அசல் தொகையைத் திருப்பிச் செலுத்தும்போது, ​​நீங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் வட்டியைச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் வட்டி கணக்கிடப்படுகிறது.

PPF கணக்கைத் தொடங்க, படிவம் A க்குப் பதிலாக, இப்போது படிவம்-1 ஐ சமர்ப்பிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு (டெபாசிட்களுடன்) பிபிஎஃப் கணக்கை நீட்டிக்க, முதிர்வுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு, படிவம் H க்குப் பதிலாக படிவம்-4 இல் விண்ணப்பிக்க வேண்டும்.

PPF கணக்கில் செய்யும் முதலீடு 50 ரூபாயின் மடங்குகளாக இருக்க வேண்டும். இந்தத் தொகை ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ 500 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் PPF-ல் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.1.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link