புரட்டாசி சோமவாரத்தில் சிவனை பூஜித்தால் வாழ்க்கை வசந்தம்! திங்கட்கிழமை வழிபாடு மகத்துவம்...
சிவனுக்கு இருக்கும் விரதங்களில் முக்கியமானது சோமவார விரதம் மற்றும் பிரதோஷ விரதம்
இன்று புரட்டாசி மாத திங்கட்கிழமை, நாளை பிரதோஷம் இரண்டு நாட்களுமே சிவ வழிபாட்டிற்கு உகந்தவை. அபிஷேகப்பிரியரான சிவனுக்கு இன்றும் நாளையும் செய்யும் அபிஷேகங்கள் நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரும்
கடவுள்களுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என ஆகமங்கள் சொல்கின்றன, அவற்றில் முக்கியமானது அபிஷேகம் தான்
திருமுழுக்கு என்று தமிழில் சொல்லப்படும் அபிஷேகம் இருப்பத்தாறு வகை திரவியங்களைப் பயன்படுத்தி செய்யப்படுபவை. ஆனால் காலப்போக்கில் அவை குறைந்துவிட்டன
சிவனை வழிபடும்போது, வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உரியது என்பது நம்பிக்கை. எனவே தேவர்கள் வளர்பிறை பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால், தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்கள் சிவபெருமானை வழிபட வேண்டும்
சிவனுக்கு பால், இளநீர், தேன், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபடவும்
வில்வம், அரளி, தாமரை, செவ்வந்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தூப, தீப வழிபாடுகள் செய்யவேண்டும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது