கொழுப்பை எரிக்க... புரதம் நிறைந்த ‘சூப்பர்’ சைவ உணவுகள்!
புரோட்டீன் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுகளை, காலை நேர உணவு, இரவு நேர உணவு மற்றும் சிற்றுண்டி ஆகிய அனைத்திலும் சேர்க்கும் போது வியக்கத் தக்க பலன்களை கொடுக்கிறது. அதிலும் காலை உணவின் போது நீங்கள் போதுமான புரதத்தை உட்கொண்டால், நாள் முழுவதும் உங்களுக்கு பசி எடுக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன, இந்நிலையில், புரதம் நிறைந்த சைவ உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்
பருப்புகளில், புரதம் மட்டுமல்லாது, மெதுவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக அறியப்படுகிறது. இது உங்கள் எடை இழப்பு முயற்சிகளுக்கு முக்கியமானது. சுமார் 1 கப் சமைத்த பருப்பில் 18 கிராம் புரதம் உள்ளது.
தண்டு கீரை விதைகள் மற்றும் குயினோவா ஆகியவை புரதத்தின் முழுமையான ஆதாரங்கள் பசையம் இல்லாத தானியங்களான, தண்டு கீரை விதைகள் மற்றும் குயினோவா ஒரு நாளைக்கு போதுமான புரத தேவையை பூர்த்தி செய்யும். உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கப்படுகிறது.
வைட்டமின் சி, புரதம், வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி, ஒரு சூப்பர் காய்கறி. இதில் உள்ள ஊட்டசத்துக்கள் அனைத்தும் எடை இழப்புக்கான முக்கிய ஊட்டச்சத்துக்கள். இது உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய உதவும். இதனை அதிக அளவில் வேக விட்டால், ஊட்டசத்து மதிப்பு குறைந்து விடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
கீரையில், வேகவைத்த முட்டையில் உள்ள அளவு புரதம் உள்ளது. கலோரிகளும் மிகவும் குறைவு. இதனை பச்சையாக சாப்பிடுவதற்குப் பதிலாக ஆவியில் வேகவைத்தால் அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கலாம். வேகவைத்த கீரை வைட்டமின்களைத் தக்கவைக்க உதவுகிறது, கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
தினமும் ஒரு சில பாதாம் பருப்புகளை உட்கொள்வது உடல் எடையை திறம்பட குறைக்க உதவும். அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை எரிக்க உதவும் அமினோ அமிலமான எல்-அர்ஜினைன் இதில் இருப்பதால், உடற்பயிற்சி அல்லது ஜிம்மிற்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் பாதாம் சாப்பிடலாம் .
பாலாடைக்கட்டிகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகக் குறைவு, மேலும் புரதம் அதிகம். கூடுதலாக, இது கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரைபோஃப்ளேவின் மற்றும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க தேவையான பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும்.