உலக கோப்பையில் புதிய வரலாற்றை எழுதிய டி காக்

Thu, 02 Nov 2023-8:20 am,

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 1ஆம் தேதி புனே நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 

அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா மீண்டும் அதனடியாக விளையாடி 50 ஓவர்களில் 357/4 ரன்கள் குவித்து அசத்தியது.

 

அந்த அணிக்கு கேப்டன் பவுமா 24 ரன்களில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த குயிண்டன் டீ காக் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 114 (116) ரன்களும் வேன் டெர் டுஷன் 9 பவுண்டரி 5 சிக்சருடன் 133 (118) ரன்கள் குவித்தனர். 

 

அவருடன் டேவிட் மில்லர் 53 (30) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த போட்டியில் அடித்த 114 ரன்களையும் சேர்த்து இந்த உலகக் கோப்பையில் 545 ரன்களை அடித்துள்ள டீ காக் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 500 ரன்கள் விளாசிய முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். 

 

இது போக ஒரு குறிப்பிட்ட உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற ஜாக் கேலிஸ் சாதனையையும். தகர்த்துள்ள டீகாக், புதிய வரலாறு படைத்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற குமார் சங்ககாராவின் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 

 

இந்த உலகக் கோப்பையில் டீ காக் 545* ரன்களும் 18* சிக்சர்களும் அடித்துள்ள நிலையில் இதற்கு முன் 2015 உலகக்கோப்பையில் சங்ககாரா 541 ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும்.

 

இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கில்கிறிஸ்ட் சாதனையையும் தகர்த்துள்ளார் டீகாக். கில்கிறிஸ்ட் 19 சிக்சர்கள் விளாசியிருந்த நிலையில், டீகாக் 22 சிக்சர்கள் அடித்துள்ளார்.

 

அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 4 சதங்களை அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் டீ காக் படைத்துள்ளார். 

 

மேலும் உலகக்கோப்பையில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் மற்றும் 2வது வீரர் என்ற குமார் சங்ககாராவின் (தலா 4) சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். 

உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சதங்கள் (2019இல் 5) அடித்த வீரராக இந்தியாவின் ரோகித் சர்மா உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link