எச்சரிக்கை! முள்ளங்கியுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
முள்ளங்கி பக்க விளைவுகள்: முள்ளங்கியை சில வகை உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால், உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படலாம். இந்நிலையில், பக்க விளைவுகளை தவிர்க்க முள்ளங்கியுடன் அல்லது முள்ளங்கி சாப்பிட்ட பிறகு, அல்லது முள்ளங்கியை சாப்பிடும் போது எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
பாகற்காய்: முள்ளங்கியை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது அல்லது பாகற்காய் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாது. முள்ளங்கியை பாகற்காய் சேர்த்து சாப்பிட்டால் சுவாச நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். முள்ளங்கியை பாகற்காய் சேர்த்து சாப்பிடுவதால் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.
வெள்ளரி: முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காய் இரண்டும் சாலட்டாக பலர் விரும்பி உண்பார்கள். இவை இரண்டுமே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்றாலும், வெள்ளரி மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.
பால்: பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. முள்ளங்கி சாப்பிட்ட பிறகு பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் அல்லது புளிப்பு பொருட்களை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இதனால் சரும பிரச்சனைகள் ஏற்படும்.
ஆரஞ்சு: முள்ளங்கி மற்றும் ஆரஞ்சு இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகள். ஆனால், முள்ளங்கி சாப்பிட்ட பிறகு ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும், எனவே அதை உட்கொள்வதை தவிர்க்கவும்.
மீன் உணவு: முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், கர்ப்பிணி பெண்கள் முள்ளங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முள்ளங்கியின் அதிகப்படியான நுகர்வு பசியின்மை, தொண்டை புண் மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தேநீர்: தேநீருடன் முள்ளங்கியை சாப்பிடுவது செரிமான அமைப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. முள்ளங்கி சாப்பிட்ட பிறகு டீ குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.