13வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால் டென்னிஸ் நாயகன் In Pics

Tue, 13 Oct 2020-1:34 am,

ஸ்பெயினின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஞாயிற்றுக்கிழமை புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். 2020 பிரெஞ்சு ஓபனின் இறுதிப் போட்டியில் உலக நம்பர் ஒன் நோவக் ஜோகோவிச்சை நேர் செட்களில் வீழ்த்த சாதனை படைத்து, தனது 13 வது வெற்றிக் கோப்பையை உயர்த்தினார். 34 வயதான நடால், தனது நீண்டகால செர்பிய போட்டியாளரான ஜோகோவிச்சை இரண்டு மணி 41 நிமிடங்களில் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். அவர் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உண்டு.  

ரோஜர் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நடால் சமன் செய்ததால் இது விளையாட்டின் வரலாற்றில் ஒரு சின்னமான தருணம். இந்த தருணத்தை உங்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். 

 (Image Courtesy: Twitter/@rolandgarros)

 

 

(Image Courtesy: Twitter/@rolandgarros)

 

பிரெஞ்சு ஓபன் 2020 இன் இறுதிப் போட்டியில் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால், பெடரரின் கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்தார். சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள டென்னிஸ் நட்சத்திரமான நடால், இப்போது பெடரரை முந்திச் செல்லும் முயற்சியில் இருப்பார். உண்மையில், முழங்கால் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட நடால், 2020 கிராண்ட் ஸ்லாம் போட்டித்தொடரை தவிர்க்கலாம் என்று நினைத்திருந்தார்.    (Image Courtesy: Twitter/@rolandgarros)

 

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்திய ரஃபேல் நடால்  தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறார். பிரெஞ்சு ஓபன் கோப்பையுடன் பாரிஸில் உள்ள கேலரிஸ் லாஃபாயெட் (Galeries Lafayette) என்ற பிரபலமான இடத்தில் ஈபிள் கோபுரம் பின்புறம் தெரியும் வகையில் போஸ் கொடுத்தார்.   (Image Courtesy: Twitter/@rolandgarros)

 (Image Courtesy: Twitter/@rolandgarros)

தனது 20 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நடால்,  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போதும், நன்றியுரை ஆற்றும் போதும் முகக்கவசம் அணிந்திருந்தார்.  

தொற்றுநோய்க்கு மத்தியில் அனைவருயும் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்ட நடால், "தொடர்ந்து செல்லுங்கள், சென்றுக் கொண்டே இருங்கள், நேர்மறையாக இருங்கள்.  நல்லதையே நினைப்போம், நன்றே நடக்கும், ஒன்றாக இணைந்து நாம் கொரோனாவை எதிர்ப்போம், விரைவில் வைரஸை வெல்வோம்" என்று நடால் நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

(Image Courtesy: Twitter/@rolandgarros)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link