பிரபாஸின் ஹாரர்-காமெடி “தி ராஜா சாப்” மோஷன் போஸ்டர் வெளியானது!!

Thu, 24 Oct 2024-5:07 pm,

பிரபாஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் போஸ்டரைப் பகிர்ந்து "இது திரில்லுடன் ஜில் செய்யும்  நேரம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

'தி ராஜா சாப்' மோஷன் போஸ்டர் பிரபாஸின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்‌ஷன் நிரம்பிய பாத்திரங்களில் மாஸாக வலம் வந்த  பிரபாஸின் புது தோற்றத்தில் நடித்திருக்கும்  இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10, 2025 அன்று  உலகெங்கும் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

 

பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் விஸ்வ பிரசாத் தயாரிப்பில், மாருதி  இயக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லருடன் கலந்த காமெடி மற்றும் காதல் நிறைந்த படம். இப்படத்திற்கு சிறப்பாக்  தமன் எஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த போஸ்டரில் "ஹாரர் இஸ் தி நியூ ஹ்யூமர்" என்ற டேக்லைனும், அதைத் தொடர்ந்து "ஹேப்பி பர்த்டே, ரெபெல் சாப்" என்பதும் இடம்பெற்றுள்ளது.“தி ராஜா சாப்” பல்வேறு மொழிகளில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

 

2 நிமிட மோஷன் “தி ராஜா சாப்” போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் "ஹேப்பி பர்த்டே" ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக பிரபாஸின் பிரமாண்ட தோற்றம் காண்பிக்கபடுகிறது. 

 

பழங்கால அரண்மனையின் பிரமாண்ட பின்னணியில், கறுப்பு உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸை வெளிப்படுத்தும் இந்த போஸ்டர், சூப்பர் ஸ்டாரின் கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது. ராஜாவாக உடையணிந்து, சுருட்டுப் பிடித்தபடி, பிரபாஸ் ஒரு சக்திவாய்ந்த, ஏக்கம் நிறைந்த அதிர்வை வெளிப்படுத்துகிறார்.

பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’முன்னணி சூப்பர்ஸ்டார் பிரபாஸ் ஹாரர் காமெடி  நடிகனாக களமிறங்குகிறார். மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும்  மோஷன் போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை, ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள்.பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டு பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link