Tourism: ஜெய்ப்பூருக்கு புகைப்பட சுற்றுலா போகலாமா?

Thu, 23 Sep 2021-5:55 pm,

அமர் கோட்டை சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்று. இது ஜெய்ப்பூர் முக்கிய நகரத்திலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள அமரில் உள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. இது இந்திய மற்றும் முகலாய பாணியிலான கட்டிடக்கலையைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. அமர் கோட்டை மற்றும் நகரத்தின் புகழ்பெற்ற வரலாற்றை எடுத்துச் சொல்லும் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி இங்கு மிகவும் சிறப்பானது.   Image credit: tourism.rajasthan.gov.in

பிரமாண்டமான நஹர்கர் கோட்டையில் இந்திய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் தனித்துவமான கலவையை நீங்கள் காணலாம். நஹர்கர் என்றால் 'புலிகளின் உறைவிடம்' என்று பொருள். புகழ்பெற்ற புராணக்கதையில், நஹர் சிங் போமியா ஒரு ரத்தோர் இளவரசர், அவருக்கு இந்த கோட்டையை நிர்மாணிப்பதில் விருப்பமில்லை. எனவே, அவரது ஆவி அந்த இடத்தை ஆட்டிப்படைத்தது. எனவே, இந்த கோட்டையை கட்டிய மகாராஜா சவாய் ஜெய் சிங், நஹர்ஹர் இளவரசரின் பெயரில் கோட்டையை அர்ப்பணித்து அவரை அமைதிப்படுத்தினார்.  

Image credit: tourism.rajasthan.gov.in

மகாராஜா சவாய் ஜெய் சிங் II ஆல் நிறுவப்பட்ட அற்புதமான சிட்டி பேலஸ் என்னும் நகரின் மத்தியில் அமைந்துள்ள அரண்மனை இப்போது ஒரு பிரபலமான அருங்காட்சியகமாக உள்ளது. பார்ப்பவர்களை ரசிக்கத் தூண்டும் அரண்மனை வளாகத்தில் பிரமாண்டமான முற்றங்கள், அழகான தோட்டங்கள் மற்றும் கோவில்கள் அமைந்துள்ளன. முபாரக் மஹால், சந்திர மஹால் என இரண்டு முக்கிய அரண்மனைகள் உள்ளன. இன்றும், அரச குடும்பத்தின் சந்ததியினர் சந்திர மஹாலில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து. Image credit: tourism.rajasthan.gov.in

ஹவா மஹால் ஜெய்ப்பூரின் மகுடமாக கருதப்படுகிறது. இது 1800 களின் பிற்பகுதியில் சிட்டி பேலஸின் விரிவாக்கமாக கட்டப்பட்டது. வளாகத்தின் வடிவமைப்பில் 953 சிறிய ஜன்னல்கள் உள்ளன, அவை சிக்கலான தேன்கூடு அமைப்பை ஒத்திருக்கிறது. 

Image credit: tourism.rajasthan.gov.in

தண்ணீர் சேகரிக்க இந்த படிக்கட்டுகள் கட்டப்பட்டன. இன்று, அவை ஜெய்ப்பூரில் முக்கியமான சுற்றுலாத் தலமாக மாறிவிட்டன. இது அமர் கோட்டை மற்றும் அம்பர் அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ளது,  

Image credit: pinkcitypost

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link