ராஜஸ்தான் வீரர்களை ’சேட்டன்’காஸ்டியூமுக்கு மாற்றிய சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், கேரளாவைச் சேர்ந்தவர். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடியிருக்கிறார்.
அவரை ராஜஸ்தான் அணிக்காக விளையாட அழைத்துச் சென்றது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த் தான்.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் சாம்சன், அணியையும் சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ராஜஸ்தான் அணியின் மொத்த வீரர்களையும் மலையாள தேசத்து சேட்டன்களாக மாற்றியுள்ளார். அடுத்த போட்டிக்காக அதே காஸ்டியூமில் புனே கிளம்பியுள்ளனர்.