விஜய்யின் அரசியல் நுழைவிற்கு வாழ்த்து சொல்லாத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது புதிய கட்சியை அறிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் நுழைவிற்கு பல சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில முக்கிய சினிமா பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து கூறாமல் இருந்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தும், விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை கூறாமல் இருந்து வருகின்றனர். கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்தபோதிலும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய் ஒரு அறிக்கையின் மூலம் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.