’பார்வையில் குறையாத காரம்’ ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
ரம்யா பாண்டியனுக்கு திரைத்துறையில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது.
ஆண்தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்களை ரம்யா பாண்டியனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்ற படங்களாக இருக்கவில்லை.
பிக்பாஸ் 4-ல் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டு 3வது இடத்தை பிடித்தார்.
இவர் கலந்து கொண்ட சீசனில் புகழுடன் ஜோடி சேர்ந்து செய்த காமெடி கலாட்டா, இருவருக்கும் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது
அடுத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார். ரம்யா பாண்டியனுக்கு என பெரும் ரசிகர் கூட்டமே சமூகவலைதளத்தில் உள்ளது. இதனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோவும் மிகப்பெரிய ஹீரோயின்களுக்கு நிகரான லைக்குகளை அள்ளுகிறது.