PM Modi Birthday: குஜராத் முதல் டெல்லி வரை - 72 ஆண்டுக்கால பயணம்

Sat, 17 Sep 2022-9:28 am,

நரேந்திர தாமோதரதாஸ் மோடி 1950ஆம் ஆண்டு செப்.17 அன்று குஜராத்தின் வாட்நகரில் பிறந்தார். 

 

தாமோதரதாஸ் முல்சந்த் மோடி - ஹூரபென் தம்பதிக்கு பிறந்தவர்.

 

இவர் தனது எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் கலந்துகொள்ள தொடங்கினார் என தெரிவிக்கப்படுகிது. 

 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை பிரகடனப்படுத்தியது, இவர் கள அரசியலில் தீவிரமாக இயங்கியதாக கூறப்படுகிறது. 

 

2001ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கேசுபாய் படேலின், உடல்நிலை மோசமானதை அடுத்து, அவருக்கு பதிலாக அப்பதவிக்கு நரேந்திர மோடி கொண்டுவரப்பட்டார். 

 

2001 அக்டோபரில் குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார். 

 

அதுவரை எம்எல்ஏவாக இல்லாத அவர், 2002 பிப்ரவரி மாதம் ராஜ்கோட் - II தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்றார். 

 

2001 முதல் 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதலமைச்சராக இருந்தார். 

 

குஜராத் முதலமைச்சராக 2063 நாள்கள் தொடர்ந்து பொறுப்பில் இருந்தார்.

2014ஆம் ஆண்டு, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

 

2014 மக்களவை தேர்தலில், வாாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் வென்றார். 

 

2014 மக்களவை தேர்தலில், பாஜக 262 இடங்களை வென்றதன் மூலம், 14ஆவது பிரதமரராக நரேந்திர மோடி தேர்வானார்

மீண்டும் 2019ஆம் ஆண்டும் வெற்றி பெற்று, 2ஆவது முறையாக பிரதமரானார்.

 

சுதந்திரத்திற்கு பின் பிறந்து, முதன்முதலில் பிரதமரானவர் மோடி.

காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஒருவர் அதிகம் நாள்கள் பதவியில் இருப்பவர் என்ற பெருமையை பெற்றவர் மோடி. 

 

பிரதமர் நரேந்திர மோடி தனது 72ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link