’நானும் தோனி ரசிகன்’ தல வீட்டு கேட் முன் நின்னு ஜடேஜா எடுத்த போட்டோ

Wed, 28 Feb 2024-11:37 pm,

கிரிக்கெட்டில் தோனியின் தளபதிகளில் ஒருவர் ஜடேஜா. இந்திய அணியாக இருந்தாலும், சிஎஸ்கே டீமாக இருந்தாலும் ஜடேஜா தோனியுடன் இருப்பார்.

 

தான் இருக்கும் வரை ஜடேஜாவை இந்திய  அணியில் எப்போதும் பிளேயிங் லெவனில் வைத்திருந்த தோனி, அந்த மந்திராவை சிஎஸ்கே அணியிலும் தொடர்ந்தார்.

 

தோனியின் நம்பிக்கைக்கு ஏற்ப தவறாமல் செயல்படக்கூடியவர் ஜடேஜா. தோனி நம்பிக்கை வைத்துவிட்டால் அதனை செய்துமுடிக்க எத்தகைய முயற்சியும் எடுக்க தயங்க மாட்டார் ஜடேஜா.

 

அதனால் இவர்களின் கூட்டணி எப்போதும் வெற்றிகரமான கூட்டணியாகவே இருந்திருக்கிறது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல ஜடேஜா தான் துருப்புச்சீட்டாக இருந்தார்.

 

அதனால், தோனிக்கு ஜடேஜாவை கிரிக்கெட் போட்டிகளை கடந்து தனிப்பட்ட முறையிலும் பிடிக்கும். இருவருக்கும் அவ்வளவு நெருக்கம் இருக்கிறது. 

 

இப்போது கூட ராஞ்சி டெஸ்ட் போட்டி முடிந்ததும் தோனியை சந்திக்க கிளம்பிவிட்டார் ஜடேஜா. அப்படி செல்லும்போது, தோனி வீட்டின் கேட் முன்பு ஒரு புகைப்படத்தை எடுத்திருக்கிறார்.

 

அதனை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கும் ஜடேஜா, நானும் தோனியின் ரசிகர் தான் என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இப்போது இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link