RBI 5 புதிய சிபில் விதிகள்: குஷியில் கஸ்டமர்ஸ்... வங்கிகளுக்கு இனி அதிக வேலை!!

Sat, 02 Dec 2023-11:07 am,

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கியமான புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சிவில் மதிப்பெண்களில் பல புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து புதிய விதிகளும் 26 ஏப்ரல் 2024 முதல் நாடு முழுவதும் பொருந்தும். 

 

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சில காலமாக கடன் மதிப்பெண்கள் தொடர்பாக நாடு முழுவதிலுமிருந்து பல புகார்களைப் பெற்றுதால் புதிய விதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த மாற்றங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். இது அவர்களின் கடன் செயல்முறையில் உதவியாக இருக்கும். 

வாடிக்கையாளரின் கடன் அறிக்கையை சரிபார்க்கும் போது, ​​அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு இந்த தகவலை வழங்க வேண்டும். நிறுவனம் விரும்பினால், இந்த தகவலை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். இதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கி அல்லது NBFC மூலம் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடுவது பற்றிய தகவலைப் பெறுவார்கள்.

 

வாடிக்கையாளரின் கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அது குறித்து வாடிக்கையாளருக்கு நிறுவனம் விரிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் அடுத்த விதி கூறுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர் தனது கோரிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு கடன் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் கடன் கோரிக்கை நிராகரிப்புக்கான காரணங்களின் விரிவான பட்டியலை பராமரிக்க வேண்டும். இந்த பட்டியல் அனைத்து கடன் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும், இதனால் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் அவரது கடன் வரலாறு தரவு பல்வேறு கடன் நிறுவனங்களிலும் இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி அதன் அடுத்த விதியில், வங்கிகள்  தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச முழுமையான கடன் அறிக்கையைத் தயாரித்து அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் முழுமையான கடன் அறிக்கை கிடைத்துவிடும். மேலும் அவர்களின் முழுமையான தரவுகளும் நிறுவனத்திடம் கிடைக்கும். இதன் அடிப்படையில், கடன் நிறுவனங்கள் வாடிக்கையாளரின் முழுமையான கடன் அறிக்கையைப் பார்த்து கடன் வழங்க முடியும்.

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வாடிக்கையாளரை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், ஆதாவது டீஃபால்டர்கள் என்று அறிவிக்கும் முன் நிறுவனங்கள் அதை பற்றி வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தக்கூடும். மேலும் டீஃபால்டர் ஆவதையும் தவிர்க்கலாம். மேலும் இதன் மூலம் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரிலும் எந்தவிதமான பாதகமான விளைவும் ஏற்படாது. மேலும் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான சிக்கல்களை நோடல் அலுவலகங்கள் எளிதில் தீர்க்க முடியும்.

 

ஒவ்வொரு வாடிக்கையாளர் புகாரையும் 30 நாட்களுக்குள் தீர்க்க கடன் தகவல் நிறுவனங்களை ஆர்பிஐ கட்டாயப்படுத்தியுள்ளது. கிரெடிட் தகவல் நிறுவனங்கள் வாடிக்கையாளர் புகார்களை 30 நாட்களுக்குள் தீர்க்கவில்லை என்றால், அவர்கள் வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். புகார்களைத் தீர்ப்பதில் தாமதம் ஏற்படுவதால், கடன் தகவல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய அபராதம் அதிகமாக இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link