ரிசர்வ் வங்கி அதிரடி: அலறும் வெளிநாட்டு வங்கிகள்... மூடப்படும் இந்திய பணக்காரர்களின் கணக்குகள்

Sat, 30 Dec 2023-12:22 pm,

இந்திய ரிசர்வ் வங்கி (Reseve Bank Of India) விதித்துள்ள கடுமையான விதிகளுக்கு மத்தியில், அதிக குறைந்தபட்ச இருப்புத் தேவை காரணமாக பல சர்வதேச வங்கிகள் பணக்கார இந்தியர்களின் கணக்குகளை மூடி வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் (HNIs) சர்வதேச வங்கிக் கணக்குகள் மூடப்பட்டுள்ளன. 

 

இந்த நடவடிக்கையை இரண்டு பிரிட்டிஷ் வங்கிகள், ஒரு சுவிஸ் வங்கி மற்றும் ஒரு பெரிய எமிரேட்ஸ் கடன் வழங்கும் நிறுவனம் ஆகியவை எடுத்துள்ளன.

இந்தியாவின் இந்த பணக்காரர்கள் ரிசர்வ் வங்கியின் (RBI) எல்ஆர்எஸ் (LRS) அதாவது தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (Liberalized Remittance Scheme) கீழ் வெளிநாடுகளில் பணத்தை மாற்றி வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், ஒரு உள்ளூர் நபர் பங்குகள், சொத்துக்கள் போன்றவற்றின் மூலம் ஆண்டுக்கு 250,000 அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார். 

சில பெரிய சர்வதேச வங்கிகளுக்கு குறைந்தபட்சம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பு தேவைப்படுகிறது. தங்கள் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாத சில உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களுக்கு (HNIs), பங்குகள் மற்றும் கடன்களில் முதலீடு செய்ய வங்கியின் செல்வ மேலாண்மை சேவையைப் பயன்படுத்த வங்கிகள் பரிந்துரைக்கின்றன. அத்தகைய முதலீடுகளின் மூலம் வங்கி லாபம் ஈட்டுவதால், கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைவாக இருந்தாலும் வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொள்ள வங்கிகள் விரும்புகின்றன. 

 

சர்வதேச வங்கிக் கணக்குகளை மூடுவது குறித்து கூறிய சிஏ நிறுவனமான ஜெயந்திலால் தக்கர் & கோவின் பங்குதாரரான ராஜேஷ் பி ஷா, “இது குறித்த மின்னஞ்சல்களைப் பெறும் நபர்கள் பணத்தை உடனடியாக அனுப்பி அதற்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

ரிசர்வ் வங்கியின் விதிகளிலும் சிக்கல் உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, சர்வதேச வங்கிக் கணக்கில் கிடக்கும் செயலற்ற பணத்தை 180 நாட்களுக்குள் முதலீடு செய்ய வேண்டும் அல்லது திரும்ப நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

 

சிங்கப்பூர் வங்கி சமீபத்தில் இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களில் சிலரைத் தொடர்பு கொண்டு, தங்களது கணக்குகளில் அவர்கள் பணத்தை அப்படியே வைத்திருந்தால் அது இந்திய விதிமுறைகளை மீறும் விதமாக இருக்கும் என்று கூறி பணத்தை முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டது.

அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் HNI-கள் என அழைகப்படுவார்கள். இவர்கள் நிதிச் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள். ரூ. 5 கோடிக்கு மேல் முதலீடு செய்யக்கூடிய உபரி நிதி கொண்டவர்கள் இந்த பிரிவின் கீழ் வருவார்கள். அத்தகைய முதலீட்டாளர்கள் நிதித் துறையில் அவர்களின் நிகர மதிப்பின் மூலம் அளவிடப்படுவதால், சில்லறை விற்பனையாளர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link