RBI on Medical Infrastructure: மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50000 கோடி
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் தற்போது மிகவும் தீவிர நிலைமையை எட்டியுள்ளது. கோவிட் பரவலை தடுக்க லாக்டவுன், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மேலும் கடுமையாகலாம் என்ற நிலையில், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனா பரவலினால் காரணமாக அதிகரித்துள்ள பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, முதல் அலையை விட ஆபத்தானது. கொரோனாவின் முதல் அலைக்குப் பிறகும் கூட இந்தியப் பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டது. அனைத்து விதமான பொருளாதார சூழ்நிலைகளையும் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டின் இறுதியான மார்ச் 31-ம் தேதி வரை இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 588 பில்லியன் டாலராக இருந்தது. இது உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க உதவும்.
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக போராட மருத்துவமனைகள், ஆக்சிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், மருந்துகள் என மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்