அவசரப்பட்டு சீக்கிரம் திருமணம் செய்தால்... வாழ்க்கையில் எக்கச்சக்க பிரச்னைகள் வரும்!

Sat, 18 May 2024-8:31 pm,

காதலித்த பெண் கரம் பிடிக்க அவர்களின் வீட்டில் பிரச்னை என்பதால் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் போதே அதாவது 18 வயதில் இருந்து 20 வயதுக்குள்ளாகவே திருமணம் செய்துகொள்வது என்பது அனுபவத்தை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. 

 

மேலும் வாழ்வில் உரிய அனுபவம் பெறாமல் திருமணம் செய்துகொள்வதன் மூலம் ஏற்படும் பிரச்னைகளை இங்கு காணலாம். 

 

வாழ்வில் உரிய அனுபவங்கள் இன்றி திருமணம் செய்துகொள்வது மிகப்பெரிய பொறுப்பை உங்களை தலையயில் ஏற்றும். கணவன் என்றால் மனைவி குறித்து எப்போதும் யோசித்து, அவரை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு வந்துவிடும். மனைவிக்கும் கணவர் குறித்து யோசிக்க வேண்டியது இருக்கும். இது புதிதாக திருமணமான அனைவருக்கும் இருக்கும் என்றாலும் இளம் வயதில் திருமணம் செய்வோருக்கு இந்த பிரச்னை மிக கடினமானதாக இருக்கும்.

 

ஒருவேளை நீங்கள் பொருளாதார ரீதியாக வலுவடையவில்லை என்றால் நிதிச்சுமை என்பது கணவன் - மனைவி ஆகிய உங்களையே சாரும். அனைத்து செலவுகளை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். தனி வீடு, தனி சமையல் ஆகியவை என்பது உங்களுக்கு பெரிய சுமையாக இருக்கும். 

 

இளம் வயதிலேயே நீங்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்தலாம். குழந்தையை பெற்றெடுப்பதும், குழந்தையை வளர்த்தெடுப்பதும் இவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். ஏனென்றால் குழந்தை வளர்ப்பில் இவர்களுக்கு போதிய அனுபவம் இருக்காது. இதனால் குழந்தையின் எதிர்காலம் கூட கேள்விக்குள்ளாகலாம்.

 

விரைவாக திருமணம் செய்வதன் மூலம் முழுமையாக கல்வியையும் பெற முடியாமல் போகலாம். அதுவும் கணவன் - மனைவி இருவரும் இளம் வயதிலேயே திருமணம் செய்திருந்தால் இதில் பெரிய பிரச்னைதான். இந்த காலகட்டத்தில் உரிய கல்வித்தகுதி இல்லாவிட்டால் எதிர்காலமே பாதிக்கப்படலாம். 

 

பொறுப்பு துறுப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. திருமணம் சார்ந்த நிபுணர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வது நல்லது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link