இந்தியாவின் தொன்மையான ஆலயங்களை புனரமைக்கும் பாஜக அரசு

Tue, 18 Oct 2022-2:40 pm,

2013 உத்தரகண்ட் வெள்ளத்தில் ருத்ரபிரயாக்கில் உள்ள கேதார்நாத் கோவில் சிதைந்து போனது.. கேதார்நாத் தாம் பகுதியின் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான ரூ.500 கோடி திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2017ல் கேதார்நாத் கோவிலில் முக்கிய புனரமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வேலைகளில் ஈஷானேஷ்வர் கோவில் கட்டுமானம், ஓம்கார் சிலை, ஆதி குரு சங்கராசார்ஜ், சிவன் சிலை ஆகியவை அடங்கும்

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையில் சார்தாம் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரியை இணைக்கும் வகையில் சார்தாம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வானிலை காரணமாக பக்தர்கள் கோயில்களுக்குச் செல்வதில் இடையூறு ஏற்படாத வகையில், அனைத்து வானிலைகளுக்கும் உகந்த சாலை அமைக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது. . ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆகஸ்ட் 2020 இல், பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தின் முதல் கட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காசி விஸ்வநாதர் கோவிலை கங்கை நதிக்கரையுடன் இணைக்கும் திட்டம் மார்ச் 8, 2019 அன்று உருவாக்கப்பட்டது. இதன் மொத்த செலவு 700 கோடி ரூபாய். 339 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை 2021 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து கங்கை படித்துறை வரை 5 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலா சேவை, வேத மையம், அருங்காட்சியகம், கேலரி, உணவு அரங்கம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

நாட்டின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஷ்வர் கோயில் உஜ்ஜயினியில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் அமைந்துள்ள மஹாகல் கோயில் வளாகத்தின் விரிவாக்கத்தின் அடிப்படையில் மகாகல் திட்டம் காசி விஸ்வநாத் ஆலயத்தை ஒத்ததாக இருக்கிறது. 2017 ஆம் ஆண்டில், மகாகல் லோக் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் உருவாக்கப்பட்டது. ஸ்ரீ மஹாகல் லோக் அதன் ஒரு பகுதியாகும்.

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, பல கோவில்களை புனரமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பல கோயில்களை புனரமைக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது,  அரசாங்கத்தின் பட்டியலில் ஸ்ரீநகரில் உள்ள ரகுநாத் கோயில், அனந்த்நாக்கில் உள்ள மார்டண்ட் கோயில், படனில் உள்ள சங்கரகோரீஸ்வர் கோயில், ஸ்ரீநகரில் உள்ள பாண்ட்ரேதன் கோயில் மற்றும் அவந்திபோராவில் உள்ள அவந்திஸ்வாமி மற்றும் அவந்தீஸ்வரா கோயில் ஆகியவை அடங்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link