SIP + SWP: ஓய்வு காலத்தில் கவலையில்லா வாழ்க்கை... 30 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூ.1,52,000 வரும்!

Sun, 03 Nov 2024-3:58 pm,

SIP (Systematic Investment Planning) என்பது மாதமாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் முறையாகும். இது நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த ஆப்ஷனாக பல பேரால் பார்க்கப்படுகிறது. SWP (Systematic Withdrawal Plan) என்பது ஒரே நேரத்தில் முதலீட்டில் இருந்து வரும் வருமானத்தை, மொத்தமாக திரும்பப் பெற்று அதற்கு வரி செலுத்துவதை விட, ஒவ்வொரு கட்டமாக பிரித்து பிரித்து தொகையை திரும்பப்பெறலாம். 

 

இதில் SIP மற்றும் SWP இரண்டையும் சேர்த்து ஓய்வு காலத்தில் எப்படி பெரிய தொகையை மாத வருமானமாக பெறலாம் என்பதை இங்கு பார்க்கலாம். SIP மூலம் மாதாமாதம் ரூ.15 ஆயிரத்தை 25 ஆண்டுகளுக்கு SIP மூலம் முதலீடு செய்தால்,  அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீங்கள் மாதாமாதம் 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை வருமானமாகவும பெறலாம். 

 

மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் குறைந்தது 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்ய வேண்டும், தொடர்ச்சியாக எப்படி முதலீட்டில் இருந்து ரிட்டர்ன்ஸ் எடுப்பது என்பதற்கு நீங்கள் உங்களின் நிதி ஆலோசகருடன் விவாதித்து முடிவு செய்ய வேண்டும். இதை 25 ஆண்டுகளாக தொடர்ந்து செய்தால் நிச்சயம் பெரிய தொகையை ஓய்வு காலத்தில் பெற்றிருப்பீர்கள். 

 

ஒரு கணிசமான ஓய்வூதிய தொகை உருவான உடன் முதலீட்டாளர் அந்தப் பணத்தை ஒரு ரொக்கமாகவோ அல்லது 6 சதவீத வருடாந்திர வருமானம் சாத்தியமுள்ள எதிலும் முதலீடு செய்யலாம். ஒருவர் தங்கள் SWP முதலீட்டில் வளர்ச்சியைப் பெறுவதால், அவர்கள் தங்கள் SIP மாதாந்திர முதலீட்டை விட அதிக தொகையை மாத வருமானமாக திரும்பப் பெறலாம்.

 

நீங்கள் மாதாமாதம் 15 ஆயிரம் ரூபாயை 25 ஆண்டுகளுக்கு SIP மூலம் முதலீடு செய்தால்  தொகை ரூ.45 லட்சம் இருக்கும். அதிலும் ஆண்டுக்கு 12% ரிட்டன்ஸ் கிடைத்தால் மொத்த தொகை 2 கோடி 10 லட்சத்து 33 ஆயிரத்து 99 ரூபாயில் இருந்து 2 கோடியே 55 லட்சத்து 33 ஆயிரத்து 99 ரூபாய் வரை இருக்கும். 

 

2 கோடியே 55 லட்சத்து 33 ஆயிரத்து 99 ரூபாய்க்கு SWP மூலம் 6 சதவீத வருடாந்திர வருமானம் கிடைக்கும். அதன்மூலம், அடுத்த 30 ஆண்டுகளுக்கு உங்களுக்கு மாதாமாதம் 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வருமானமாக வரும். 

 

நீங்கள் 30 ஆண்டுகளாக இப்படி திரும்பப்பெறுவதன் மூலம் மொத்தமாக 5 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பெறுவீர்கள். மீதத்தொகை 3 லட்சத்து 25 ஆயிரத்து 291 ஆக இருக்கும். இந்த வழியை உங்களின் 25 வயதில் இருந்து தொடங்கினால் நிச்சயம் 80 வயது வரையிலும் நீங்களும், உங்கள் குடும்பமும் பொருளாதார சிக்கல் இல்லாமல் வாழலாம்.  

 

பொறுப்பு துறப்பு: இதனை பின்பற்றும் முன்னர் மியூச்சுல் ஃபண்ட் குறித்தும், SIP, SWP முதலீட்டு முறைகள் குறித்தும் நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link