SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது கையில் ரூ.6 கோடி... மாதம் ரூ.6000 முதலீடு போதும்
சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான நிதி: கோடிகளில் பணத்தை சேர்க்க, லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களால் முடிந்த சிறிய அளவிலான முதலீட்டை, விடாமல் தொடர்ந்து நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டும். ஓய்வு பெறும் போது உங்கள் கையில், 6 கோடி ரூபாய் கார்பஸை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டால், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஓய்வின்போது ஆறு கோடி நிதி: குறைவான வருமானம் மாதம் ரூபாய் 30,000 சம்பளத்திலும், திட்டமிட்டு சேமித்தால், ஓய்வின்போது ஆறு கோடி நிதி உங்கள் கையில் இருக்கும். இதற்குத் தேவை சரியான திட்டமிடல் மட்டுமே. மிகச் சிறிய அளவிலான முதலீடுகள் கூட, நீண்ட கால முதலீடாக தொடரும் போது மிகப் பெரிய அளவில் பெருகும் என்பதால், இளமையிலேயே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்.
கோடீஸ்வர கனவை எளிதாக நிறைவேற்ற: இளம் வயதிலேயே சேமிக்க தொடங்குவது, கோடீஸ்வர கனவை எளிதாக நிறைவேற்ற உதவும். எவ்வளவு அதிக காலத்திற்கு சேமிப்பை தொடர்கிறோமோ, அந்த அளவிற்கு பணம் பன்மடங்காகும். அதற்கான முக்கிய காரணம், கூட்டு வட்டியைப் போன்ற ஆண்டு வருமானம்.
சராசரி ஆண்டு வருமானம்: பொதுவாக பரஸ்பர நிதியங்களின் மூலம் கிடைக்கும் சராசரி ஆண்டு வருமானம் 12 முகம் 15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனினும் சில சிறந்த பரஸ்பர நிதியங்கள், 20 முதல் 30 அல்லது அதற்கும் அதிகமான வருமானத்தைக் கொடுக்கும் கொண்டவை.
40 ஆண்டுகள் தொடர் முதலீடு: 20 வயதான ஒரு நபர், மாதம் 6000 ரூபாய் எஸ்ஐபி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 40 ஆண்டுகள் முதலீடு செய்யும் போது, அதிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் 15 சதவீதம் என்று வைத்துக் கொண்டால், அறுபதாவது வயதில் அவரது கையில், சுமார் 7 கோடி நிதி சேர்ந்திருக்கும்.
வருமானத்திற்கு ஏற்ப முதலீட்டை அதிகரித்தல்: 25 வயதான ஒரு நபர், மாதம் ரூபாய் ஆயிரம் என்ற அளவில் பரஸ்பர நிதிய முதலீட்டை தொடங்கிய நிலையில் 40 ஆண்டுகள் தொடர் முதலீட்டில், ஒவ்வொரு ஆண்டும், வருமானம் பெருகுவதற்கு ஏற்ப, முதலீட்டையும் சிறிதளவு அதிகரித்து வந்தால், குறைந்த காலத்திலேயே ஆறு கோடி நிதியை சேர்த்து விடலாம்.
ஆயிரத்தை கோடிகளாகும் சிறந்த பார்முலா: 30 அல்லது 35 வயதான நபர்கள், எஸ்ஐபி முதலீட்டை தொடக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும், வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப, முதலீட்டையும் அதிகரித்து வரவேண்டும். இது ஆயிரத்தை கோடிகளாகும் சிறந்த பார்முலாவாக இருக்கும். மிகக் குறைந்த காலத்திலேயே கோடீஸ்வர கனவு நிறைவேறும்.
குறிப்பு: பரஸ்பர நிதிய முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. எனவே, முதலீட்டு முறைகள் குறித்து நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து விரிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.