வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை குறைச்சு எடை போடாதீங்க...!
Peerkangai Health Benefits: பீர்க்கங்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி6, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவற்றோடு, அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி.
கல்லீரல் ஆரோக்கியம்: பீர்க்கங்காய், உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகள் மட்டுமல்லாது ஆல்கஹால் எச்சங்களையும் அகற்ற உதவும். கல்லீரலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கும் என்பதால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான காய்கறியாக கருதப்படுகிறது.
உடல் பருமன்: பீர்க்கங்காய் சாப்பிடுவது எடை இழப்புக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது தவிர, எடை இழப்புக்கு மிகவும் தேவையான நீர்ச்சத்து நிறைந்தது பீர்க்கங்காய்.
செரிமானம்: ஆயுர்வேதத்தில் பீர்க்கங்காய் செரிமானத்தை மேம்படுத்தும் என கூறப்படுகிறது. ஜீரணிக்க எளிதானது என்பதோடு, கோடைக்கு உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும். இது சளி, பித்தத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும்.
நீரிழிவு: சுகர் லெவலை குறைக்க நினைக்கு நீரிழிவு நோயாளிகளுக்கு பீர்க்கங்காய் ஒரு வரப்பிரசாதம். முதலாவதாக, இது உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இரண்டாவதாக, நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.
மலச்சிக்கல்: நார்சத்து நிறைந்த பிரச்சனையை நீக்குவதற்கும் பாகற்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். எனவே, உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், இதனை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சரும ஆரோக்கியம்: பீர்க்கங்காயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது சருமத்தில் உள்ள முகப்பரு பிரச்சனையை குறைக்க உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள நீர்சத்து சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்குவதோடு, சருமத்தை உள்ளிருந்து டீடாக்ஸ் செய்து பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.