Indraja Shankar: ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்த்த விழா! வைரலாகும் புகைப்படங்கள்..
காமெடி நடிகர் ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மகள் இருக்கிறார். இவர், விஜய்யுடன் பிகில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிகில் படத்தில், இந்திரஜா பாண்டியம்மாஎன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்திரஜா, விருமன் என்ற படத்திலும் ஹீரியோனுக்கு தோழியாக நடித்திருந்தார்.
இந்திரஜாவிற்கு, திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திரஜா சங்கர், அடிக்கடி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். அவரை ‘மாமா’ என்றும் குறிப்பிடுவார்.
தற்போது, அவர் ’மாமா’ என்று குறிப்பிட்டு வந்த அந்த நபரையே தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
சமீபத்தில் நடைப்பெற்றுள்ள இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.