ஆர்சிபி கப் அடிக்க... அடுத்த வருஷம் இந்த 5 வீரர்களை கண்டிப்பாக கழட்டிவிடனும் - யார் யார் தெரியுமா?

Thu, 23 May 2024-6:41 pm,

ஒரு ஐபிஎல் அணியே எப்போதும் வலுவாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அனைவருக்கும் அனைத்துவிதமான வீரர்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். 

 

ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற்றது. அதில் ஒரு அணி மொத்தம் 4 வீரர்களை தக்கவைக்கலாம். குறிப்பாக மூன்று இந்திய வீரர்களுக்கு மேலோ அல்லது 2 வெளிநாட்டு வீரர்களுக்கு மேலோ தக்கவைக்க முடியாது. 

 

அதாவது அதிகபட்சமாக இந்திய வீரர்கள் என்றால் மூன்று பேரையும், வெளிநாட்டு வீரர்கள் என்றால் இரண்டு பேரையும் தக்கவைக்கலாம். அதுவே இந்த முறையும் பின்பற்றப்படுமா என தெரியவில்லை. இந்த விதிகளில் மாற்றம் வரவும் வாய்ப்புள்ளது. 

 

அந்த வகையில் 2025 ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெறும் மெகா ஏலத்தை முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து இதில் காணலாம். 

 

மேக்ஸ்வெல்: வில் ஜாக்ஸ் இருக்கும் இடத்தில் மேக்ஸ்வெலுக்கு நிச்சயம் வேலை இருக்காது. எனவே, மேக்ஸ்வெல்லை தக்கவைக்க வாய்ப்பில்லை.

 

கேம்ரூன் கிரீன்: இந்தாண்டு ஆர்சிபி அணிக்கு கிரீன் சிறப்பாக விளையாடினாலும் அவரை அதிக தொகைக்கு தக்கவைக்க இயலாது. எனவே, இவரையும் நிச்சயம் ஆர்சிபி விடுவிக்கும். 

 

மயங்க் தாகர்: ஷாபாஸ் அகமதுக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து 1.8 கோடி ரூபாய்க்கு இவரை வாங்கியது. எனவே இவரை ஆர்சிபி தக்கவைக்க வாய்ப்பே இல்லை

 

அல்ஸாரி ஜோசப்: வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என்ற ரீதியில் இவரை மிகவும் நம்பி 11.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது.இருப்பினும் இவரை எடுத்தது ஆர்சிபிக்கு பெரிய ஏமாற்றம்தான். எனவே இவரை தக்கவைக்க வாய்ப்பில்லை. 

 

ரீஸ் டோப்ளி: இவரும் அல்ஸாரி ஜோசப் போல்தான். இவரை ஆர்சிபி 1.9 கோடி ரூபாய்க்கு எடுத்தது.ஆனாலும் இவர் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. எனவே இவரையும் ஆர்சிபி தக்கவைக்க வாய்ப்பில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link