In Pics: ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது UNESCO

Mon, 26 Jul 2021-12:37 pm,

ராமப்பா கோயில் என்றும் அழைக்கப்படும், 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்க 2019 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது.

"உலக பாரம்பரிய சின்னமாக சேர்க்கப்பட்டது: இந்தியாவின் தெலுங்கானா ககாதியா ருதேஸ்வரா (ராமப்பா) கோயில். வாழ்த்துக்கள்!" என்று யுனெஸ்கோ ட்வீட் செய்துள்ளது.

உலக பாரம்பரிய சின்னத்தில் சேர்க்க பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

கி.பி 1213 இல் கட்டப்பட்ட இந்த கோயில் காகத்திய பேரரசின் கீழ், கட்டப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின்ல்,  கோயிலுக்காக 40 ஆண்டுகளாக பணிபுரிந்த அதன் கட்டிடக் கலைஞரான ராமப்பா பெயர் சூட்டப்பட்டப்பட்டது

ராமலிங்கேஸ்வர சுவாமியின் இந்த கோயில் ககாதியா வம்சத்தின் படைப்பாற்றல் மற்றும் கைவினைத்திறனை எடுத்துக்காட்டுகிறது. ஆறு அடி உயர மேடையில் அமைந்திருக்கும் இந்த கோவில்  ஒரு நட்சத்திரத்தின் வடிவத்தில் உள்ளது, மேலும் சுவர்கள், தூண்கள் மற்றும் கூரைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link