உலக கோப்பை 2023: சச்சின் கணிப்பு! இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார். அவருடைய கணிப்பில் அரையிறுதிப் போட்டியில் முன்னேறும் 4 அணிகளை தெரிவித்துள்ளார்.
முதல் இடத்தில் இந்திய அணி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்த முறை உலக கோப்பை கிரிக்கெட் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் போட்டியில் பங்கேற்று இருக்கும் 10 அணிகளுடன் ஒவ்வொரு முறையும் மோத வேண்டும்.
லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.