இணையத்தை கலக்கும் கோமாளி பட நாயகி சம்யுக்தா ஹெக்டே பிகினி புகைப்படங்கள்..!

Sun, 06 Sep 2020-1:52 pm,

கன்னடம் மற்றும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சம்யுக்தா ஹெக்டே. இவர், கிரிக் பார்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். 

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்திலும், வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களிலும் சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சம்யுக்தா ஹெக்டே நேற்று முன்தினம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே அகரா ஏரியில் உள்ள பூங்காவில் தனது தோழிகளுடன் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு ஆபாசமாக நடன பயிற்சியில் ஈடுபட்டார். 

இதனை பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பூங்காவில் ஆபாச உடை அணிந்து நடனமாடுவது குறித்து சம்யுக்தா ஹெக்டேவிடம் அங்கிருந்தவர்கள் கேட்டனர். 

மேலும், பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளியும், ஆபாச உடையுடன் நடனமாடுவதை கண்டித்து சம்யுக்தா ஹெக்டேவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த சம்யுக்தா ஹெக்டேவும், அவரது தோழிகளும் பொதுமக்களுடனும், காவலாளியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதுபற்றி உடனடியாக எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link