பாதச் சனியா இருந்தாலும் நட்சத்திர பாதத்தை மாத்தினாலும் சனி பெயர்ச்சின்னாலே பிரச்சனை தான்!!!
ஏழரைச் சனி, ஜென்ம சனி, பாத சனி, விரயச் சனி, அஷ்டம சனி, கண்டகச் சனி அர்த்தாஷ்டம சனி என சனியின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்களைக் கொடுக்கும்
ஆகஸ்ட் 18 இன்று, சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்கும் என்று சொல்லாவிட்டாலும், நுணுக்கமான சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்
சனியும் அவருடைய தந்தையும், எதிரி கிரகமானவருமான சூரியனுக்கு எதிரில் வருவதால் சமசப்தக தோஷம் உண்டாகிவிட்டது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் நுழைந்த நிலையில், சனி இன்று பூரட்டாதி ராசியில் மாற்றம் அடைந்துள்ளார்.
சூரியனும் சனியும் நேருக்கு நேர் வந்து உருவாக்கிய இந்த தோஷம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். மோசமாக பாதிக்கப்படும் மூன்று ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
சனியின் நட்சத்திர மாற்றம் மற்றும் சம்சப்தக் யோகம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் வீண் அலைச்சலை உருவாக்கும். பெரும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். முதலீடு செய்யும்போது லாபம் வருவது ஒருபுறம், நஷ்டம் ஏற்படாமல் இருப்பதே பெரும்பாடாகிவிடும். சிந்தித்து செயலாற்றுங்கள்
சனியின் நட்சத்திர பாத மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கும் மிகவும் மோசமானதாக இருக்கும். சண்டைகள் சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. உங்களுடைய சொந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருங்கள். யாருடைய விஷயத்திலும் தலையிடாதீர்கள்
சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் இருந்தாலும், நட்சத்திர மாறுதலால், கும்ப ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அல்லது நோய்களால் பாதிப்பு ஏற்படும். உடல்நிலை மோசமடையலாம், பண விரயம், வீண் செலவுகள் ஏற்படலாம்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது