சனீஸ்வரரின் நேர் பார்வையில் தத்தளிக்கும் 5 ராசிகள்! வேற வழியில்ல 235 நாள் பொறுத்துக்கோங்க

Tue, 07 Nov 2023-7:47 am,

சனியின் வக்ர நிவர்த்தியால் வாழ்க்கையில் வேதனையை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் சில ராசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சனீஸ்வரர் நேர் பாதையில் இயங்கும் இன்னும் 235 நாட்கள் இவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். அப்போது தான், சிறிதளவு நிம்மதியாவது கிடைக்கும். சனியின் நேர்கதி இயக்கத்தால் சிரமங்களை சந்திக்கவிருக்கும் ஐந்து ராசிகள் இவை தான்... 

சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் விருச்சிக ராசியில் நேரடியாக எதிரொலிக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சல் மற்றும் குடும்ப பிரச்சனைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சவால்கள் இருக்கும். மனதில் குழப்பம் ஏற்படும்.

கடக ராசிக்காரர்கள் சனியின் நேரடி சஞ்சாரத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கடக ராசியில் சனி ஏற்படுத்தும் தாக்கம், நிதி நெருக்கடியை அதிகரிக்கும். உறவுகளில் கசப்புணர்வு அதிகரிக்கலாம். உடல்நிலை மோசமடையலாம் என்பதால் கவனமாக இருக்கவும்

மீன ராசிக்கு தற்போது, ஏழரை சனி நடக்கும் நிலையில், சனியின் வக்ர நிவர்த்தி உறவுகளில் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும். வாழ்க்கையில் ஏமாற்றத்தை உணரலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனை இருக்கலாம். வேலையில் தடைகள் ஏற்படும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பொருளாதார விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வேலையில் தடைகள் உருவாகலாம், டென்ஷன் அதிகரிக்கும். உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்

கும்ப ராசியில் சனி இருக்கும் நிலையில், அவர் ராசிக்கு அதிபதியாகவும் இருப்பவர் என்பதால், கும்ப ராசியினருக்கு சனி பகவான் அதிக தொல்லை தரமாட்டார் என்றாலும், உடல்நிலை குறித்து அலட்சியமாக இருக்காதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link