வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, முழு ராசிபலன் இதோ
மேஷ ராசி: பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய ஆதாரங்கள் மூலம் பணம் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
ரிஷப ராசி: சனியின் வக்ர பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுபமான பலன் தரும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்ற நேரம். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
மிதுன ராசி: சனியின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதிப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணத்தை தருவார். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு வழி திறக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியை தரும்.
சிம்ம ராசி: சனி வக்கிரம் உங்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தடைபட்ட வேலைகள் முடிவடையும், வியாபாரம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடக ராசி: உங்களுக்கு அஷ்டம சனி காலமாக இருப்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
கன்னி ராசி: உங்களுடைய பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். நிதி சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டங்களும் பண வருமானமும் வரும். இந்த கால கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.
துலாம் ராசி: சனி வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிக ராசி: தனிப்பட்ட உறவுகளில் உறுதியற்ற தன்மை ஏற்படலாம். சனியின் வக்ர நிலை உங்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும். தூங்கிக் கொண்டு இருந்த அதிர்ஷ்டம் எழுந்திருக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். பதவி, பணம், மரியாதை கிடைக்கும்.
மகர ராசி: பொருளாதார நிலைமையை பலப்படுத்தும், அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். மன அழுத்தம் விலகி இருக்கும்.
கும்ப ராசி: சனி வக்ர பெயர்ச்சி பகவான் உங்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மீன ராசி: வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறலாம். இதனுடன், வணிகத் துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்திலும் உயர்வு இருக்கும்.