சனிப்பெயர்ச்சி 2023: கொட்டி கொடுக்கப்போகும் சனி..! வாரி கட்டப்போகும் ராசிகள்
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் சனியின் உதயத்தால் ஆதாயம் பெறுவார்கள். எதிரிகள் அழிக்கப்படுவார்கள். பொருளாதார நிலை மேம்படும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இது மிக நல்ல நேரமாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கூடும். உங்கள் காதல் விவகாரங்களுக்கு இந்த காலம் சாதகமானது.
ரிஷபம்: சனியின் உதயத்தால் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் நற்பெயர் உயரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தனிமையில் இருப்பவர்கள், அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு நபரை சந்திக்கலாம்.
மிதுனம்: சனியின் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அள்ளித்தரும். இந்த நேரத்தில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியமும் மேம்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
தனுசு: சனியின் உதயத்தால் தனுசு ராசிக்காரர்களின் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அனைவருடனும் அன்பாக பழகி நல்ல பெயரை பெறுவீர்கள்.
மகரம்: சனியின் உதயம் உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்களை அள்ளித் தரும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பழைய நோயிலிருந்து விடுபடுவீர்கள். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். பணம் சேமிக்க இப்போது பல வாய்ப்புகள் வந்து சேரும். உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.