Tax Saving Tips: வரி கட்டாமல் தவிர்க்க எளிய டிப்ஸ்... வரியும் மிச்சமாகும், வருமானமும் அதிகமாகும்

Tue, 09 Jan 2024-6:13 pm,

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உத்தரவாதமான வருமானம் தரும், முதலீட்டுக்கு பாதுகாப்பான திட்டமாகும். PPF 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது, அதாவது இது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம். இதில் தற்போது 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. PPF இல் செய்யப்படும் முதலீடுகள் E-E-E பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது உங்கள் முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை அனைத்திற்கும் வரி விலக்கு கிடைக்கும். PPF இல் முதலீடு செய்தால், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டுகளின் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்கள் (ELSS), சிறந்த வருமானத்துடன் வரிச் சேமிப்பையும் வழங்குகிறது. இதிலும், 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம் மேலும் இதன் மூலம் பெரிய நிதியையும் உருவாக்கலாம். ELSS என்பது குறைந்த லாக்-இன் காலத்தைக் கொண்ட திட்டம். ELSS இல் முதலீட்டை 3 ஆண்டுகளுக்கு மீட்டெடுக்க முடியாது.

தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS), நீங்கள் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரியைச் சேமிக்கிறீர்கள். ஆனால் இதற்கு மேல், பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதலாகச் சேமிக்கலாம். அதாவது மொத்தம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்

 

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அதாவது SCSS என்பது முதியோருக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சிறப்புத் திட்டமாகும். தபால் அலுவலகத்தின் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கு 8.20 சதவீத வட்டி விகிதத்தில் பெறுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், 1000 முதல் 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. இதன் மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்து பிரிவு 80சியின் கீழ் வரிவிலக்கு பெறலாம்.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் அதாவது NSC என்பது பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தைத் தரும் திட்டமாகும். இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் முதலீடு செய்யலாம். NSC இல் முதலீட்டை 1000 ரூபாயில் தொடங்கலாம். முதலீட்டிற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. தற்போது இதில் அதற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்கை நாட்டின் எந்த தபால் நிலையத்திலும் திறக்கலாம். இதிலும், 80சி கீழ் வரி விலக்கு பலன் கிடைக்கும்.

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது இதற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நன்மை என்னவென்றால், உங்கள் மகளுக்கு ஒரு நல்ல நிதி டெபாசிட் செய்யப்படுவது மட்டுமல்லாமல், 80C இன் கீழ் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் இதை அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம்.

நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் அதாவது 5 வருடங்களுக்கு FD செய்தால், அதன் மீதான வரி விலக்கின் பலனைப் பெறுவீர்கள். வங்கிகளில் மட்டுமின்றி அஞ்சலகங்களிலும் வரி சேமிப்பு FD விருப்பத்தைப் பெறுவீர்கள். அனைத்து இடங்களிலும் வட்டி விகிதங்கள் மாறுபடும். வட்டி விகிதத்தைப் பார்த்து உங்கள் வசதிக்கேற்ப முதலீடு செய்யலாம். இதில் நீங்கள் 80C இன் கீழ் வரி விலக்கையும் பெறலாம்.

சேமிப்பு வங்கிக் கணக்கிலிருந்து (Savings Account) பெறப்படும் வட்டிக்கும் வரிவிலக்கு பெறலாம். பிரிவு 80TTA இன் கீழ், எந்தவொரு தனிநபரும் அல்லது HUFகளும் அதிகபட்சமாக ரூ.10,000 வரை வரிவிலக்கு பெறலாம். இதில் வங்கி, கூட்டுறவு சங்கம் அல்லது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு ஆகியவை அடங்கும். இந்த வரிவிலக்கு அனைவருக்கும் உள்ளது, அதற்கு மூத்த குடிமகன் என்ற நிபந்தனை இல்லை. 10,000 க்கும் அதிகமான வட்டி மற்ற வருமானத்தின் பிரிவில் கணக்கிடப்படும், அதற்கு வரி செலுத்த வேண்டும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link