மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகளுக்கு `NO` சொல்லுங்க!
இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாலங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம் இதுபோன்ற சில செயல்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ தினமும் செய்து வருகிறோம், அதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நமது உணவு பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம். எனவே, மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும் உணவை விட்டு விலகி இருந்தல் இயதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அதிக உப்பை உட்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இந்த பழக்கத்தை உடனே மாற்றுங்கள். ஏனென்றால் அதிக உப்பு உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல. அதிக உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிக சர்க்கரை சாப்பிடுவதும் இதயத்திற்கு நல்லதல்ல, ஏனெனில் அதிக சர்க்கரை சாப்பிடுவதால், சர்க்கரை நோய் வரும் அபாயமும் உள்ளது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
உங்கள் உணவில் முட்டையின் மஞ்சள் கருவை ஒருபோதும் சேர்க்க வேண்டாம், ஏனெனில் மஞ்சள் கருவில் சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. எனவே, குறைந்த அளவே முட்டைகளை உட்கொள்ள வேண்டும்.
மைதா எந்த சூழ்நிலையிலும் உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. இதனை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது)