வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... வட்டியில் சலுகை வழங்கும் SBI... மிஸ் பண்ணாதீங்க!
பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன் தள்ளுபடியை வழங்கத் தொடங்கியுள்ளது. வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான தனித்துவமான திட்டத்தின் கீழ், இந்தியாவின் முன்னணி கடன் வழங்கும் வங்கியான எஸ்பிஐ 65 அடிப்படை புள்ளிகள் (bps) வரை சலுகைகளை வழங்குகிறது.
வீட்டுக் கடன் சலுகைக்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, சலுகைகள் சிபில் ஸ்கோர் அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
CIBIL ஸ்கோர் சிறப்பாக இருந்தால், கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடன் வழங்குவதற்கான முடிவு வங்கியை மட்டுமே சார்ந்துள்ளது.
உங்கள் சிஐஆரின் 'அக்கவுண்ட்' மற்றும் 'என்கொயரி' பிரிவில் பிரதிபலிக்கும் உங்கள் கிரெடிட் நடத்தையின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட உங்கள் CIBIL ஸ்கோர் 300-900 வரை இருக்கும். 700க்கு மேல் மதிப்பெண் பொதுவாக சிறந்ததாக கருதப்படுகிறது.
CIBIL ஸ்கோர் 750-800 மற்றும் அதற்கு மேல் இருந்தால், சலுகை காலத்தில் 55 bps சலுகையுடன் 8.60 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும்.
CIBIL ஸ்கோர் 101-150 வரம்பின் கீழ் வருபவர்களுக்கு, வங்கி எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை. அவர்களுக்கான வீட்டுக் கடன் வட்டி விகிதம் 9.45 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.