SBI vs PNB vs HDFC Bank... வட்டியை அள்ளித்தரும் வங்கி எது...!!
நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI சமீபத்தில் FD மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. முன்னதாக நவம்பரில், FD வட்டி விகிதங்களை PNB மற்றும் அக்டோபரில் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி உயர்த்தியது. இங்கே, குறிப்பிட்டுள்ள மூன்று வங்கிகளில், எந்த வங்கி உங்களுக்கு அதிக வட்டி தருகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து அறிவது, உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய உதவும்.
எஸ்பிஐ சமீபத்தில் 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான FDகளுக்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக இது 3 சதவீதமாக இருந்தது. இப்போது 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான FDகளுக்கான வட்டி விகிதம் 4.5 சதவீதத்தில் இருந்து 4.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி 5.75 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது தவிர, 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான FDகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 5.75 சதவீதமாக இருந்தது. மூன்று ஆண்டுகள் முதல் ஐந்தாண்டுகளுக்கு குறைவான FDகளுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்பிஐயின் அதிகபட்ச 400 நாட்களுக்கான எஃப்டிக்கான வட்டி விகிதம் 7.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி PNB 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDகளில் பொது முதலீட்டாளர்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு இது 4 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும். 444 நாட்கள் FDக்கு வங்கி அதிக வட்டியை வழங்குகிறது.
HDFC வங்கியில் முதலீட்டாளர்கள் 3 சதவீதம் முதல் 7.20 சதவீதம் வரை வட்டி விகிதங்களைப் பெறுகின்றனர். வங்கி பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. வங்கியில் பொது முதலீட்டாளர்கள் 55 மாத FD க்கு அதிக வட்டியைப் பெறுகிறார்கள், இது 7.20 சதவீதம்.
உங்கள் பணத்தை முதலீடு செய்யும் முன், உங்களுக்கு ஏற்ற வகையிலான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதே சிறந்தது. இதற்கு நீங்கள் நிதி ஆலோசகரின் உதவியை நாடுவது உங்களுக்கு சரியான முடிவுகளை எடுக்க உதவும்