இலங்கை போராட்டம்; கட்டுகடங்காத மக்கள்; ஆதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்
நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் ரெனில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் எனவும் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். அதிபர்பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகுவார் என அறிவிக்கப்பட்ட போதிலும், போராட்டக்காரர்கள் பின்வாங்கத் தயாராக இல்லை.
ஜூலை 13 புதன்கிழமை பதவி விலகப் போவதாக கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். ஆனால் கோட்டாபயவின் இருப்பிடம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதிபரின் இல்லத்தை போராட்டக்காரர்கள் கையகப்படுத்தி நீச்சல் குளத்தில் குளித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
கோட்டாபய ராஜினாமா செய்தால், சபாநாயகர் அபேவர்தன தற்காலிக பொறுப்பை ஏற்பார். சபாநாயகர் அதிகபட்சமாக 30 நாட்களுக்கு குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருக்க முடியும். புதிய கூட்டணி அரசு இன்னும் ஒரு வாரத்தில் பதவியேற்கும்.
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கோட்டாபய பதவியில் இருக்கும் வரை அவர் பாதுகாக்கப்படுவார் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.