செவ்வாய் பெயர்ச்சி: இன்னும் 5 நாட்களில் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், முழு ராசிபலன் இதோ

Sun, 10 Mar 2024-9:57 am,

செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு ஆற்றல், தன்னம்பிக்கை, தைரியம் உத்வேகம் ஆகியவை அதிகரிக்கும். எனினும் பொறுமையின்மை, பதற்றம், கோபம் ஆகியவற்றையும் அனுபவிப்பீர்கள். இவற்றின் மீது கட்டுப்பாடு அவசியம். 

செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் பண வரவை அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். கல்வியில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சியால் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவை பெறுவீர்கள். புதிய உறவுகள் உருவாகும், பயணங்களை மெற்கொள்வீர்கள். இவற்றால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

கடக ராசிக்காரர்கள் கும்பத்தில் செவ்வாயின் பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிப்பார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் கூடும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம். அதிகமாக பேசுவதையும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் தவிர்கவும். 

செவ்வாயின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை, ஆற்றல், தைரியம் மற்றும் தலைமைத்துவ திறன்களை அதிகரிக்க கூடும். போட்டிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

செவ்வாய் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு பணியில் முன்னேற்றம், கல்வியில் வெற்றி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் சோர்வு அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. 

செவ்வாயின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இவர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உறவுகளில் சில மனக்கசப்புகள் வரலாம்.

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆற்றல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கூடும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நிதி நிலை மேம்படும். 

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். பல வித நல்ல செய்திகளை பெறுவீர்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும், படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். 

 

செவ்வாய் பெயர்ச்சி காலம் மகர ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் காலமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முதலீடுகளால் லாபம் கிடைக்கும். சமூகத்தில்  கௌரவம் கூடும். ஆரோக்கியம் மேம்படும். 

 

செவ்வாயின் பெயர்ச்சியால், கும்ப ராசிக்காரர்களுக்கு ஆற்றல், தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். பல வித புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். 

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link