இன்னும் 4 நாட்களில் சனி ஜெயந்தி 2023: இந்த ராசிகளுக்கு மட்டும் பம்பர் ஜாக்பாட்
ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். விரைவில் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழப் போகிறது. பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
கடக ராசி: கடக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் குறையும். குடும்பம் மற்றும் பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடக ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகளில் மகத்தான வெற்றி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவீர்கள்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் பணி பாராட்டப்படும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
மகர ராசி: மகர ராசிக்கு சுப பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பணிகள் பாராட்டப்படும். ஆனால், இந்த நேரத்தில் உங்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு பண பலன்களை தரவுள்ளது. சனிபகவானின் அருள் உங்களுக்கு இருக்கும். கடின உழைப்பு, அன்பு, மரியாதை ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள்.