பங்கு சந்தையில் லாபத்தை அள்ள வேண்டுமா... ‘இந்த’ நிறுவன பங்குகளில் முதலீடு செய்யவும்!

Tue, 06 Dec 2022-11:18 am,

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டிஸ், ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை திங்களன்று நஷ்டத்தை சந்தித்தன. அதேசமயம், டாடா ஸ்டீல், என்டிபிசி, எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் பவர் கிரிட் ஆகியவை லாபத்தில் இருந்தன.

ஷேர் இந்தியாவின் துணைத் தலைவரும், ஆராய்ச்சித் தலைவருமான ரவி சிங், செவ்வாய்க்கிழமை டாடா ஸ்டீல் பங்குகளை வாங்கினால் நல்ல லாபம் பெறலாம் அறிவுறுத்தியுள்ளார். ரவி சிங் டாடா ஸ்டீலில் ரூ.112 ஸ்டாப் லாஸ் உடன் ரூ.122 டார்கெட் விலை வைத்துள்ளார். திங்கட்கிழமையும் இந்தப் பங்கு ஏற்றம் கண்டு ரூ.115.80-ல் முடிவடைந்தது.

டிஎல்எஃப் லிமிடெட் நிறுவன பங்குகளும் லாபத்தை தரும் என ரவி சிங் மதிப்பிட்டுள்ளார். 1.5 சதவீதம் ஏற்றத்துடன், திங்கள்கிழமை பங்குகளின் விலை ரூ.417.55 ஆக இருந்தது. DLL நிறுவனத்தில்  ரூ. 430 டார்கெட் விலையுடன் ரூ.418-ல் வாங்கலாம் என்கிறார். அதே சமயம், பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.415 ஆக வைத்துக் கொள்ளலாம்.

நிபுணத்துவ பங்குகளின் நிறுவனர் மற்றும் இயக்குநரான மனோஜ் டால்மியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அவர் கருத்துப்படி, RIL பங்குகளின் ஸ்டாப் லாஸ் ரூ.2677 எனவும்,  இது தவிர, இதன் இலக்கு ரூ.2,652  என்ற அளவிலும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குக்கு மனோஜ் டால்மியா நல்ல ரேட்டிங் வழங்கியுள்ளார். திங்கள்கிழமை ரூ.3929.55-ல் முடிவடைந்த இந்தப் பங்கின் டார்கெட் விலை கு ரூ.4,049 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பங்கிற்கு  ரூ.3,936 ஸ்டாப் லாஸ்.

(பொறுப்பு துறப்பு: பங்குச் சந்தையில் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எந்தவொரு முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link