செய்தி வாசிப்பாளராக இருந்து திரைத்துறையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்!
சரண்யா துராடி: புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இது தவிர இன்னும் சில சின்னத்திரை தொடர்களிலும், ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிநவ்யா :நியூஸ் j தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' எனும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர இன்னும் பல சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சீரியல் நடிகரான தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாஸ்லியா மரியநேசன் :இலங்கையை சேர்ந்த இவர் சக்தி எனும் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்குபெற்று பிரபலமானார். கடந்த ஆண்டு ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஷிப்' படத்தின் மூலம் திரைத்துக்குள் நுழைந்தார், தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரியா பவானி ஷங்கர் :செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கியவர் தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார். புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். 2017-ல் வெளியான மேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக திரைத்துறைக்குள் நுழைந்தார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அனிதா சம்பத் : செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கியவர் தற்போது நடிகையாக உயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் பாலிமர் மற்றும் நியூஸ் 7 போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பின்னாளில் சன் டிவி நெட்ஒர்க்கில் நுழைந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் வாயிலாக BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டில் வின்னரானார். அதன் பின்னர் வெப் சீரிஸ் மற்றும் சில ஒரு சர்க்கார், காப்பான் போன்ற சில படங்களில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இவர் சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.