ஆட்டம் காட்டும் நடிகை கஸ்தூரி.. தேடும் போலீஸ்.. நெட்டிசன்கள் கிண்டல்!
முன்பாக தெலுங்கு மக்கள் குறித்து அவர் அவதூறாக பேசியதாக அவர் மீது பல்வேறு தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டிருந்தது மற்றும் அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான சம்மனை கொடுக்க காவல்துறையினர் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவருக்கு போன் செய்த பொது அவரின் போன் அணைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காவல்துறையினர் அடுத்த கட்டமா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தலைமறைவாகி இருக்கும் நடிகை கஸ்தூரியை தனிப்படை அமைத்து தேடும் பணி மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் சம்மனை பெறக் கூடாது என்பதற்காகவே நடிகை கஸ்தூரி இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக சென்னை எழும்பூரில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் வீடு பூட்டப்பட்டு, செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்த 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தனது சர்ச்சை பேச்சுக் குறித்து விளக்கம் அளித்தார். ஆனாலும் பிரச்சனை முடிவுக்கு வராததால், தனது எக்ஸ் (X) தளத்தில், "தெலுங்கு மக்கள் குறித்து தான் பேசிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. கவனக்குறைவாக நடந்தற்குகாக தனது வருத்தத்தை தெரிவித்து.
அதேநேரத்தில் அதே எக்ஸ் (X) தளத்தில், "மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம் சகோதர மனப்பான்மையுடன் அறிவுறித்தியதால் தளர்ந்தது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தெலுங்கர் என்றோ தெலுங்கு மக்கள் குறித்தோ பேசவேயில்லை இல்லை இல்லை. தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.
"மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன்" என்ற இந்த பதிவை மேற்கோள்காட்டி, சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.