Shocking News! ஜெயலலிதாவின் ஆலயத்தில் பிரகார தெய்வங்களாக பாஜக தலைவர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கான இந்தக் கோவில், திருமங்கலம் குன்னத்தூரில் அமைச்சர் உதயகுமார் மேற்பார்வையில் உருவானது. 12 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் அந்த கோவிலில் 400 கிலோ எடை கொண்ட ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலய திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி (Edappadi Palaniswami), எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு தெய்வங்களும், மக்களின் இதயக்கோவிலில் குடியிருந்தார்கள், மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.
தேர்தல் கூட்டணி என்பது வேறு, கட்சியின் கொள்கைகளும் செயல்பாடுகளும் வேறு, கட்சியின் நினைவுச்சின்னங்கள், கட்சியின் தலைவருக்காக அமைக்கப்படும் இதுபோன்ற சிறப்பு ஆலயங்கள் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட கட்சியினரின் புகைப்படங்கள் வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், வேறு ஒரு கட்சியினரின் புகைப்படங்கள் வைத்திருப்பது மிகவும் அதிர்ச்சிகளையும், வெவ்வேறு அனுமானங்களையும் எழுப்பியுள்ளது.