America:குழந்தைகளுக்கு எலக்ட்ரிக் ஷாக்; தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

Sat, 10 Jul 2021-2:03 pm,

ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, இந்த வழக்கு அமெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்த rotenberg educational center என்னும்  கல்வி நிறுவனத்தில் குழந்தைகளுக்கு எலக்ட்ரிக் ஷாக் வழங்கப்படுகின்றன. இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைந்தது. இந்த விஷயத்தை விசாரித்த நீதிமன்றம், அதிர்ச்சி அளிக்கும் விதமாக இதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிர, குழந்தைகளின் பெற்றோர்களும் இதை ஏற்றுக்கொண்டனர். சில குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், எலக்ட்ரிக் ஷாக்குகள் தங்கள் குழந்தைகள் உயிரை காப்பாற்ற  ஒரு உயிர் காக்கும் சிகிச்சையாக சிறந்ததாக உள்ளது, அது அவர்களுக்கு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

மாசசூசெட்ஸில் உள்ள இந்த பள்ளியின் பெயர் ரோட்டன்பெர்க் கல்வி மையம். இந்த வழக்கில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் க்ராஜுயேடட் எலக்ட்ரானிக் டிஸிலரேட்டரை (Graduated Electronic Decelerator -GED)பயன்படுத்துவதை தடை செய்ய முடியாது என கூறிய நீதிமன்றம், இது இறுதி சிகிச்சையாகும் எனவும் நீதிமன்றம் கூறிவிட்டது. 

க்ராஜுயேடட் எலக்ட்ரானிக் டிஸிலரேட்டர் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பயன்படுத்தப்படுகிறது.  மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள்இந்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் தற்கொலை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற இத்தகைய முறைகள் இந்த பள்ளியில் பின்பற்றப்படுகின்றன.

2016 ஆம் ஆண்டில், GED சிகிச்சையை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அந்த நேரத்தில் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது. இதன் பின்னர், எஃப்.டி.ஏ முதலில் இந்த எலக்ட்ரிக் ஷாக் சாதனத்தை தடை செய்யக் கோரியது  அதேசமயம், இந்த மருத்துவ சாதனத்தை தடை செய்ய சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link