Side Effects of Pineapple: அன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்
அலர்ஜி ஏற்படும்: அன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது நீக்கிவிடும்.
பற்களை மோசமான பாதிப்பு: அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். இது பற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். பல் புழைகள் மற்றும் பல் ஈறு அழற்சி பிரச்சனைகளை கொண்டவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
கருச்சிதைவு ஏற்படும்: கருவை சுமக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ணாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களில் இல்லாமல் பிற கட்டங்களில் பெண்கள் இந்த பழத்தை உண்ணலாம்.
இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும்: இரத்த சர்க்கரையை ஊக்குவிக்கும் அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. ஆனால் அது அதிகளவில் உள்ளது தான் பிரச்சனையாக இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.