ஐப்பசி அடைமழை போல 4 ராசிக்காரர்களை பணமழையால் நனைய வைக்கும் சுக்கிரனின் கேட்டை நட்சத்திரப் பெயர்ச்சி!

Wed, 23 Oct 2024-10:40 am,

கேட்டை நட்சத்திரம், கோட்டைக் கட்டி ஆளக்கூடிய அளவு நற்பலன்களைக் கொடுக்கக்கூடியது என்று சொல்வார்கள். அறிவுக்கும், புத்திசாலித்தனத்திற்கும் உரியவரான புதனின் கேட்டை நட்சத்திரத்தில், செல்வக்காரகரான சுக்கிரன் பெயர்ச்சியாவது மிகவும் சுபமானது. அறிவும் செல்வமும் சேர்ந்தால் வெற்றி தானே?

இந்த மாதம் ஐப்பசியில் தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. அதற்கு முன்னதாக தந்தேரஸ் என்ற நாளில் செய்யப்படும் லட்சுமி பூஜை பணத்தை வீட்டில் தங்க வைக்கும், செல்வச் செழிப்புடன் வாழ வழி செய்யும்

ஐப்பசியில் சுக்கிரன் பெயர்ச்சியாவது பலருக்கும் பல்வேறு சுபபலன்களைக் கொடுத்தாலும், அதிக அதிர்ஷ்டம் பெறவிருப்பது நான்கு ராசிகள்...

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி, மிகவும் நன்மை பயக்கும். பண வரவு, தொழிலில் வெற்றி, விரும்பிய வேலை என அனைவரும் விரும்பும் அனைத்து நன்மைகளும் மகர ராசியினருக்கு வாய்க்கும் காலம் இது. வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மறக்கமுடியாத தருணங்களை உருவாக்கும் காலம் இது.

விருச்சிக ராசியினருக்கும், கேட்டையில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் மிகவும் நல்லதாக இருக்கும். ஆசைப்பட்ட விஷயக்களில் பலவற்றை அடையலாம். மனதில் மகிழ்ச்சியும் உல்லாசமும் பொங்கும் காலம் இது

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் செல்வத்தை மழையாய் பொழியும் காலம் இது. திடீர் பணவரத்துகளால் வங்கி இருப்பு அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். குறி வைத்த இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும். வாழ்க்கை துணையுடன் சுற்றுலா சென்று அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டும்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் சம்பாதிக்கும் காலம் இது. வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பரிசுகள் வந்து குவியும். எதிர்பாராத பண வரத்து கிடைக்கும். முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம் 

 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link