Side Effects of egg: இந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிட கூடாது

Mon, 13 Sep 2021-3:03 pm,

வாத்து இறைச்சி மற்றும் முட்டை முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும். முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும். ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். 

உருளைக்கிழங்கு மற்றும் முட்டை உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப்பண்டங்களை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே இந்த இரண்டு பொருட்களை கொண்டு உணவுப்பண்டகளை தயாரித்து உண்பது செரிமானத்தை மிகவும் தாமதமாக்கி அஜீரணத்தை ஏற்படுத்தும்.

பழங்கள் மற்றும் முட்டை ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, பிளம்ஸ், ஆப்ரிகாட், மற்றும் தர்பூசணி போன்ற பழங்களுடன் முட்டை உள்ளிட்ட புரதப் பொருட்களுடன் சாப்பிட அறிவுறுத்தப்படுவதில்லை. முட்டை மற்றும் பழங்களின் செரிமானத்தின் வேகத்தில் உள்ள வேறுபாட்டால் இதை சேர்த்து சாப்பிட கூடாது. 

சர்க்கரை மற்றும் முட்டை முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் (Health Tips) கூறுகளை உடைக்கும். மேலும், நச்சுத்தன்மையுள்ள இந்த சேர்மத்தை உறிஞ்சுவது மிகவும் கடினம், மேலும் இரத்தம் உறைந்து போகும்.

முட்டை மற்றும் சோயாபால் முட்டைகளில் (Eggs Benefits) உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும். இது நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது கூடவே உடல்சிதைவு பிரச்சனையை ஏற்படுத்தும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link