எச்சரிக்கை! இந்த பிரச்சனை இருந்தால் தக்காளி வேண்டாமே..!
தக்காளி பக்க விளைவுகள்: புளிப்பு சுவைகொண்ட தக்காளி இல்லாத உணவில் நிறையான சுவையை பெற முடியாது. அதோடு அது அள்ளிக் கொடுக்கும் ஆரோக்கியத்திற்கும் அளவில்லை.என்றாலும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
சிறுநீரக கல் பிரச்சனை: அளவுக்கு அதிகமாக தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படலாம். இதன் மூலம் அளவிற்கு அதிகமாக கிடைக்கும் கால்சியம், ஆக்சலேட் கற்களாக உருவாகி சிறுநீரகத்தில் வலியை ஏற்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தக்காளி தவிர்ப்பது நல்லது.
அசிடிட்டி பிரச்சினை: தக்காளியில் உள்ள புளிப்பு சுவை காரணமாக, இயற்கையாகவே இதற்கு அமிலத்தன்மை உண்டு. எனவே தக்காளி அளவிற்கு அதிகமானால், அஜீரணக் கோளாறுகளான, அசிடிட்டி வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே அசிடிட்டி பிரச்சினை அதிகமாக இருந்தால் தக்காளிக்கு நோ சொல்வது நல்லது.
மூட்டு வலி:வயதானவர்கள் இளையவர்கள் என பலர் சந்திக்கும் ஒரு பிரச்சனை மூட்டு வலி. மூட்டு வலி அதிகமாக இருக்கும் போது தக்காளிக்கு நோ சொல்வது நல்லது. ஏனென்றால் இதில் வீக்கத்தை ஏற்படுத்தும் சில கூறுகள் இருப்பதாக உணவு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வயிற்றுப்போக்கு: தக்காளியில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா காணப்படலாம். தக்காளியை சரியாக சுத்தம் செய்யாமல் உண்ணும் போது, இது வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். எனவே வயிற்றுப்போக்கு இருந்தால், பச்சை காளி சாப்பிடுவது நல்லதல்ல. அதோடு அதனை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
சரும பிரச்சனைகள்:தக்காளியில் உள்ள லைகோபின், சரும பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பாதிப்பை தீவிரமாக்கலாம். இதனால் சருமத்தின் பளபளப்பு நீங்கி மந்தமான தோற்றத்தைக் கொடுக்கும். ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆன லைகோபின் நாள் ஒன்றுக்கு 75 மில்லி கிராம் மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது என்கின்றனர் சுகாதார வல்லுனர்கள்.
ஒவ்வாமை பிரச்சனைகள்: தொண்டையில் அரிப்பு, இருமல், தும்மல், சருமத்தில் வெடிப்புகள் போன்ற ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் நோய் தீவிரமாகும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.