தர்பூசணி சாப்பிடும் போது ‘இந்த’ தவறை கண்டிப்பா செய்யாதீங்க..!!
தர்பூசணி: அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலில் உள்ள நீர் சத்து குறையாமல் இருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியும் அளிப்பதால் சிறந்த கோடை கால பழமாக கருதப்படுகிறது.
உப்பு: சிலருக்கு தர்பூசணியை நறுக்கி, அதில் உப்பு தூவி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனை மிகவும் தவறு என்கின்றனர் நிபுணர்கள். தர்பூசணியில் உப்பைத் தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றாலும், அதன் பக்கவிளைவுகளைப் பற்றி அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.
ஊட்டச்சத்து: குறைந்த கலோரி கொண்ட இந்த பழத்தில் சிறிது உப்பு சேர்ப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது. தர்பூசணி சாப்பிடுவதன் முழு நன்மைகளையும் நீங்கள் பயன்படுத்த விரும்பினால், தர்பூசணியை உப்பு கலந்து உட்கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
இரத்த அழுத்தம்: தர்பூசணியில் உப்பைப் போட்டால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, பல கடுமையான நோய்களைச் சந்திக்க நேரிடும். தர்பூசணியை இவ்வாறு உட்கொள்வதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்கனவே BP பிரச்சனை இருந்தால், தர்பூசணியை உப்பு சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறோம்.
சாப்பிடும் நேரம்: இரவு நேரங்களில் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் சில நேரங்களில் வயிற்று சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகலாம். எனவே செரிமான பிரச்சனைகளை தவிர்க்க இரவு நேரத்தில் இதனை உண்ண வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி: தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அத்தியாவசியமான இந்த ஊட்டச்சத்தை அதிகம் உள்ளதால் தர்பூசணி உட்கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இளமை: முடி மற்றும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் தர்பூசணியில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே முதுமை அண்டாமல் இருக்க தர்பூசணியை தவறாமல் உட்கொள்ளவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.