நீங்கள் அறிவாளியா? இல்லையா? ‘இந்த’ 8 அறிகுறி இருந்தா நீங்க ஜித்து ஜில்லாடிதான்!
நீங்கள் புத்திசாலியா இல்லையா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். அவை என்னென்ன தெரியுமா?
அறிவாளியாக இருப்பவர்கள் தன்னை சுற்றி என்ன விஷயம் நடக்கிறதோ அது குறித்த கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பர். இது அவர்களின் தகவல் அறியும் திறனை எடுத்து காண்பிக்கிறது.
சுய கட்டுப்பாடு:
புத்திசாலியாக இருப்பவர்கள், சுய கட்டுப்பாட்டை அதிகம் கொண்டிருப்பர். அது மட்டுமன்றி, சுய ஒழுக்கத்தையும் இவர்கள் பேணி பாதுகாப்பர். இவர்கள் அனைத்து சூழல்களிலும் அமைதியாக இருந்து அதனை கையாள்வர்.
நேர்மை:
புத்திசாலியாக இர்ப்பவர்கள், அனைவரிடமும் நேர்மையாகவும் மறைமுகம் எதுவும் இன்றியும் பழகுவர். அதே போல, ஒரு விவாதத்தில் எதிரில் இருப்பவரின் வாதம் தவறாக இருந்தாலும் அவரிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வர்.
திறந்த மனம்:
புத்திசாலித்தனம் நிறைந்தவர்கள், பல்வேறு விஷயங்களை பழகிக்கொள்ள, ஏற்றுக்கொள்ள மனம் திறந்தவராக இருப்பர். இதனால் அவர்களிடம் அனைவராலும் எந்த வரைமுறையுமின்றி பழக முடியும்.
அறிவாளியாக இருப்பவர்கள், தங்கள் உணர்ச்சிகள் என்னென்ன, தான் என்ன உணருகிறோம் என்பது குறித்து சுய விழிப்புணர்வுடன் இருப்பர்.
முடிவெடுத்தல் திறன்:
அறிவாளியாக இருப்பவர்களுக்கு, முடிவெடுக்கும் திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதில்லை என்றாலும் அது தவறாக இருந்தாலும் அதைக்குறித்து கவலைப்பட மாட்டார்கள்.
ஆர்வம்:
புத்திசாலித்தனத்துடன் இருப்பவர்கள், எதையாவது கற்றுக்கொள்ள ஆர்வமுடன் இருப்பர். இதனால் அவர்களின் கற்றல் திறனும் அதிகரிக்கும்.