ஜிம்மிற்கு செல்லாமல் உடலை பிட்டாக வைக்க 5 எளிய உடற்பயிற்சி!

Sun, 31 Jul 2022-1:55 pm,

பிளாங்க் பயிற்சி செய்வது முழு உடலுக்கும் நன்மையை அளிக்கிறது, இதில் Plank Under Reach என்பது பிளாங்க் பொசிஷனில் உடலை வைத்துக்கொண்டு ஒரு கையால் பேலன்ஸ் செய்துகொண்டு ஒரு கையை எதிரே உள்ள முழங்காலுக்கு நேரே கொண்டு செல்லவேண்டும்.  இப்படியே இரு கைகளையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

 

Oblique Crunch இடுப்பிற்கும், சிக்ஸ்-பேக்ஸ் உருவாவதற்கும் வழி செய்கிறது.  நேராக தரையில் படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் இருக்கும் பக்கம் இடுப்புடன் சேர்த்து திருப்ப வேண்டும், இவ்வாறு இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

 

பொதுவக ஆண்கள் புஷ்-அப் செய்வது அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.  Spiderman Push-up செய்யும்போது சாதாரணமாக புஷ்-அப் செய்வது போல இருந்து ஒரு காலின் முட்டியை கையின் முட்டியுடன் தொடுமாறு வைக்க வேண்டும், இப்படியே மாறி மாறி செய்யவேண்டும்.

 

Single Leg Squat செய்ய எப்போது ஸ்குவாட்ஸ் செய்வது போல் இரண்டு கால்களை பேலன்ஸ் செய்யாமல் ஒரே காலில் பேலன்ஸ் செய்ய வேண்டும்.  அதாவது கீழே அமர்ந்து ஒரு காலை மடித்தும் ஒரு காலை நீட்டியும், இப்படியே மாறி மாறி செய்ய வேண்டும்.

 

Mountain Climber பயிற்சி செய்ய மலையேற்றம் செய்வது போல செய்ய வேண்டும், புஷ்-அப் பொஷிஷனில் உடலை வைத்துக்கொண்டு கையை மட்டும் நிலையாக வைத்து காலை மட்டும் மலையில் ஏறுவது போல் செய்ய வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link